ADDED : ஜூலை 26, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : சங்கராபுரம் அருகே 2 குழந்தைகளுடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தர அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார் .
சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனுார் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திகேயன், 33; கட்டட தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா, 25; திருமணமாகி 6 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும், 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளை மூரார்பாளை யத்தில் உள்ள வெண்ணிலாவின் தாய் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தங்க வைத்து விட்டு, கட்டட வேலைக்காக கார்த்திகேயன் கோயம்புத்துார் சென்றார்.
நேற்று 2 பெண் குழந்தைகளுடன் வெண்ணிலா மாயமானார். இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயன் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.