/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு வீடு புகுந்து அட்டூழியம்
/
பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு வீடு புகுந்து அட்டூழியம்
பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு வீடு புகுந்து அட்டூழியம்
பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு வீடு புகுந்து அட்டூழியம்
ADDED : மே 04, 2025 06:37 AM
சின்னசேலம் : சின்னசேலத்தில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம், இந்திரா நகரை சேர்ந்தவர் பாரதிராஜா மனைவி ரோஜா, 25; இவர் கடந்த ஒரு மாதமாக, அதே பகுதி, டிரைவர் சங்க நகரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றனர். இந்நிலையில் தனியாக இருந்த ரோஜா, வீட்டு ஹாலில் உள்ள சோபாவில் தனது இரண்டரை வயது குழந்தையுடன் அமர்ந்து மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், அவரது வாயை பொத்தி, கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.