/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி துவக்கம்
/
புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : அக் 05, 2025 03:37 AM

சின்னசேலம், : வி.பி. அகரம் கிராமத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த வி.பி.அகரம் கிராம திருக்குன்றம் பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி ஒன்றிய பொது நிதி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணிகள் நேற்று துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., சவுரிராஜன், துணை பி. டி. ஓ., ரங்கசாமி, உதவி பொறியாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன் வரவேற்றார். துணைத் தலைவர் தனம் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் குமார், செங்கோடன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் துரை நன்றி கூறினார்.