/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பு மாதாந்திர ஆய்வு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு மாதாந்திர ஆய்வு கூட்டம்
ADDED : அக் 04, 2025 07:32 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நாஷா முக்த் பாரத் அபியான் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
போக்சோவால் பா திக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்ற துறையினர் இணைந்து மறுவாழ்வு அளிக்க வேண்டும். பள்ளி இடைநி ற்றல் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பள்ளியில் சேர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
போக்சோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த மாதங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.