/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் விஜயதசமி விழா
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் விஜயதசமி விழா
ADDED : அக் 04, 2025 06:47 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த நவராத்திரி விழா நிறைவு நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
புதுச்சேரி, வில்லியனுார் இசைத்தென்றல் கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் சவுந்தர்ய கனகாம்பிகை உடனுறை அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் கோவிலிலும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.