/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 2.25 கோடி மதிப்பில் புதிய வாரசந்தை சின்னசேலம் பேரூராட்சியில் பணி துவக்கம்
/
ரூ. 2.25 கோடி மதிப்பில் புதிய வாரசந்தை சின்னசேலம் பேரூராட்சியில் பணி துவக்கம்
ரூ. 2.25 கோடி மதிப்பில் புதிய வாரசந்தை சின்னசேலம் பேரூராட்சியில் பணி துவக்கம்
ரூ. 2.25 கோடி மதிப்பில் புதிய வாரசந்தை சின்னசேலம் பேரூராட்சியில் பணி துவக்கம்
ADDED : ஆக 12, 2025 11:06 PM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய வாரச்சந்தை அமைப்பதற்கான அ டிக்கல் நாட்டு விழா நடந்தது.
சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய தினசரி மற்றும் வாரச்சந்தை அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட புதிய சந்தை கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல். ஏ., அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.
கலெக்டர் பிரசாந்த் கூறுகையில்; புதிய வாரச்சந்தை மூலம் இப்பகுதி விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு பயனுள்ளதாக அமையும். அத்துடன் பொருளாதார மேம்பாடு பெற பேருதவியாக இருக்கும்.
இதன்மூலம் சின்னசேலம் பேரூராட்சிக்கும் வருமானம் ஈட்ட வழிவகை ஏற்படும். வாரச்சந்தை கட்டுமான பணியை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.
சின்னசேலம் சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.