/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் விபரம் சேகரிக்கும் பணி
/
மாற்றுத்திறனாளிகள் விபரம் சேகரிக்கும் பணி
ADDED : ஜூலை 14, 2025 03:34 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விபரங்களை சேகரிக்கும் பணி நடக்க உள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே செல்லும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் முழு விபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட முன்கள பணியாளர்கள், நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, விபரங்களை சேகரிப்பவர். செப்., மாதம் இறுதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.