/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டர் மோதி தொழிலாளி பலி
/
டிராக்டர் மோதி தொழிலாளி பலி
ADDED : டிச 09, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடில் டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பகண்டை கூட்ரோட்டைச் சேர்ந்தவர் பெருமாள், 45; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணிக்கு திருக்கோவிலுார் - சங்கரா புரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னாள் வந்த டிராக்டர் பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

