/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழா ஓவிய போட்டி
/
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழா ஓவிய போட்டி
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழா ஓவிய போட்டி
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழா ஓவிய போட்டி
ADDED : நவ 21, 2025 05:25 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு 'என் பார்வையில் கபிலர் குன்று' தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது.
உலக மரபு வார விழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் அருங்காட்சியகம் சார்பில், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'என் பார்வையில் கபிலர் குன்று' தலைப்பில் ஓவிய போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் சிவகுமார் வரவேற்றார்.
தொல்லியல் துறையின் மாவட்ட அலுவலர் சுரேஷ் மாணவிகளுக்கு ஓவிய உபகரணங்களை வழங்கினார். மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் கபிலர் குன்றின் வரலாற்றினை விளக்கி கூறினார். ஆசிரியர்கள் சூர்யா, காமாட்சி, மஞ்சுளா, புவனேஸ்வரி, இந்திரா, அல்லி, சங்கீதா, காந்திமதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
உலக மரபு வார விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கட்டுரை போட்டி, கல்வெட்டு படி எடுப்பு என ஒரு வாரத்திற்கு நடைபெறும் நிகழ்வின் நிறைவாக வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

