/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி
/
சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி
சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி
சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி
ADDED : நவ 21, 2025 05:25 AM

தியாகதுருகம்: வீரசோழபுரம் சுசீலா கலை அறிவியல் கல்லுாரியில் சுய உதவி குழு பெண்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.
தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் சுசீலா கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சி நடந்தது. உதவி கலெக்டர் சுபதர்ஷினி தலைமை தாங்கினார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கல்லுாரி தாளாளர் செல்வகுமரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் வித்யா வாழ்த்தி பேசினார்.
சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. திரளான சுய உதவி குழு பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உதவி திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

