/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலக மண் வள தின விழிப்புணர்வு முகாம்
/
உலக மண் வள தின விழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 06, 2025 06:01 AM

தியாகதுருகம்: பானையங்கால் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உலக மண் வள தினத்தை முன்னிட்டு தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ரகுராமன், ஊராட்சி தலைவர் மதியழகன், துணை தலைவர் வரதம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூரியா வரவேற்றார்.
முகாமில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, இயற்கை உரங்களின் பயன்பாடு, பயிர் சுழற்சி செய்வதன் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
துணை வேளாண்மை அலுவலர் ராஜா திரவ உயிர் உரங்கள் பயன்பாடு, பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பாதுகாப்பது குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவி, கலைவாணன், பயிர் அறுவடை பரிசோதகர்கள் சுதாகர், கிருஷ்ணன், தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர். அமிர்தலிங்கம் நன்றி தெரிவித்தார்.

