/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோபுர வடிவ கொட்டகையில் விநாயகர் வழிபாடு
/
கோபுர வடிவ கொட்டகையில் விநாயகர் வழிபாடு
ADDED : ஆக 29, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரில் கோபுர வடிவில் கொட்டகை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரில் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் கோபுர வடிவில் கொட்டகை அமைக்கப்பட்டு, 9 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது.
வானவேடிக்கையுடன் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்.