/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிவன் கோவிலில் சொக்கப்பனை வழிபாடு
/
சிவன் கோவிலில் சொக்கப்பனை வழிபாடு
ADDED : டிச 06, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி சிவகாமி சுந்தரி சமேத தில்லை சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளினார். கோவில் எதிரில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு பூஜை செய்து, கற்பூரம் வைத்து ஏற்றபட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது.

