/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களில் இதுவரை 22,525 பேர் பயனடைந்தனர்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களில் இதுவரை 22,525 பேர் பயனடைந்தனர்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களில் இதுவரை 22,525 பேர் பயனடைந்தனர்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களில் இதுவரை 22,525 பேர் பயனடைந்தனர்
ADDED : டிச 06, 2025 05:40 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 22,525 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் 3 முகாம் வீதம் 27 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மனநலம், பல், சித்த மருத்துவம், இயன்முறை, சர்க்கரை நோய் சிகிச்சை உள்ளிட்ட 17 வகை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
இம்முகாமில் அனைவருக்கும் ரத்தம், இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. மருத்துவர் பரிந்துரைப்படி 'எக்கோ கார்டியோகிராம்', 'எக்ஸ்ரே', 'அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்', பெண்களுக்கான கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் 22,525 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் உரிய முறையில் இம்முகாம்களை பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

