/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கபிலர் நினைவு துாணிற்கு மாலை அணிவிப்பு
/
கபிலர் நினைவு துாணிற்கு மாலை அணிவிப்பு
ADDED : ஏப் 29, 2025 11:29 PM

திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார், கபிலர் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நேற்று நடந்தது.
நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார். நகராட்சி ஆணையர் திவ்யா, நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா, தாசில்தார் ராமகிருஷ்ணன், பண்பாட்டு கழக தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.
சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கபிலர் நினைவு துாண் அருகே வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்.
தமிழ் சங்க தலைவர் உதியன், ஜனசக்தி பேசினர்.
நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், கோவிந்தராஜன், ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், பண்பாட்டு கழக துணை தலைவர் சுப்பிரமணியன், சன்மார்க்க சங்க நிறுவனர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் குணா நன்றி கூறினார்.