/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
/
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 12, 2025 06:55 AM
கள்ளக்குறிச்சி: மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மாணவர்கள் கல்லுாரி மூலம் வழங்கப்பட்டுள்ள https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 31 ஆகும்.

