/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
/
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
ADDED : ஆக 06, 2025 12:40 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தமிழார்வலர்கள் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை, தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் செய்பவர் தன்விவரக் குறிப்பு, 2 புகைப்படம், ஆற்றிய தமிழ்ப்பணி, இருப்பிடச் சான்று, ஆதார் கார்டு நகல் ஆகிய விவரங்களுடன் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் உள் ளது.

