/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
/
கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
ADDED : செப் 16, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவபாண்டலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 30; இவருக்கு, 'கலைஞர் கனவு இல்ல வீடு' திட்டத்தில், வீடு ஒதுக்கப்பட்டு, பின், ரத்து செய்யப்பட்டது.
ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், கலெக்டர் பிரசாந்த் , சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், பி.டி.ஓ., ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
பி.டி.ஓ., நாராயண சாமி புகாரின்படி, சங்கராபுரம் போலீசார் சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.