/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : நவ 23, 2025 04:44 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்துார்பேட்டை நகராட்சி மாடல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அரசன் மகன் முருகராஜ், 30; சென்னை தனியார் நிறுவன ஊழியர்.
ஊருக்கு வந்திருந்த முருகராஜ், நேற்று மதியம் 3:00 மணிக்கு, உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து மாடல் காலனி பகுதிக்கு பைக்கை ஓட்டி சென்றார்.
உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகம் அருகே சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் முருகராஜ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே முருகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உளுந்துார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

