/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
/
திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது
ADDED : ஜன 08, 2025 05:24 AM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பல்வேறு தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
எலவனாசூர்கோட்டை போலீசாரின் வாகனச் சோதனையில் சிக்கிய உளுந்துார்பேட்டை அடுத்த கூத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன்கள் விஜய், 28; விக்னேஷ், 24; ஆகியோர் வீடு புகுந்து திருடி வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் விஜய், விக்னேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த விஜய்யின் தாய் வீரம்மாளை 50 கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரு பைக்குகள், 42 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய், என 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விஜய் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 14 திருட்டு வழக்குகள் உள்ளன.
தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த விஜய்யை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரசக்சதுர்வேதி பரிந்துரை செய்ததின்பேரில்
கலெக்டர் பிரசாந்த், விஜய்யை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதற்கான உத்தரவை கடலுார் மத்திய சிறை உள்ள அவரிடம் போலீசார் வழக்கினர்.