ADDED : ஜூலை 29, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; மேல்நாரியப்பனுார் கிராமத்தில் ரயில என்ஜின் மோதியதில் வாலிபர் உடல் சிதறி பலியானார்.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கவின், 23; விவசாய கூலி தொழிலாளி. கவின் நேற்று முன்தினம் இரவு மேல்நாரியப்பனுார் - செல்லியம்பாளையம் கிராமம் இடையே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார்.
அப்போது, இரவு 2:00 மணிக்கு விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற பெட்டிகள் இணைக்கப்படாத ரயில் எஞ்சின் கவின் மீது மோதியது. இதில், கவின் உடல் சிதறி சம்பவ இடத்திலே இறந்தார்.
தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் கவினின் உடல் பாகங்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.