ADDED : அக் 29, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: அக். 29-: முகம் சிதைத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அருகே இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியஜோ, 20; நேற்று முன்தினம் இரவு தன் நண்பர்களுடன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை அப்பகுதியில் உள்ள மாதா கோவில் அருகே அந்தோணி ஆரோக்கியஜோ முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
திருநாவலுார் போலீசார், உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
திருநாவலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தோணி ஆரோக்கியஜோவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

