/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளாஸ்டிக் பைகள் விற்பனை ஜோர்
/
பிளாஸ்டிக் பைகள் விற்பனை ஜோர்
ADDED : பிப் 20, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் தடைசெய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' விற்பனையை தடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
சங்கராபுரத்தில், 250 க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' கேரிபேக்குகள் விற்பனை நடந்து வருகிறது. இதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனையில் ஈடுபடுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால் டீக்கடை, ஓட்டல், மளிகை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில், விற்பனை தீவிரமாக நடக்கிறது. இதைத்தடுக்க, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.