/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில் தெருநாய் தொல்லையால் பகுதியினர் அச்சம்
/
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில் தெருநாய் தொல்லையால் பகுதியினர் அச்சம்
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில் தெருநாய் தொல்லையால் பகுதியினர் அச்சம்
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில் தெருநாய் தொல்லையால் பகுதியினர் அச்சம்
ADDED : பிப் 04, 2025 12:54 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு, பட்டா மாற்றம், உட்பிரிவு, திருத்தம், நஞ்சை நிலங்களுக்கு தடையில்லா சான்று, பட்டா மேல்முறையிடு விசாரணை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அதேபோல, வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு ரேஷன் கார்டு தொடர்பான கோரிக்கை மற்றும் ஆதார் மையத்திற்கு புதிய ஆதார், திருத்தம் ஆகியவைக்கு குழந்தைகள், பெண்கள் என, ஏராளமானோர் தினமும் வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலக வளாகத்தில், தெருநாய் தொல்லை அதிகரித்து உள்ளது. கூட்டமாக திரியும் அவை, திடீரென துரத்தி கடிப்பதால், குழந்தைகள், பெண்கள், வயதானோர் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மேலும் அவை, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு துரத்துவதால், அப்பகுதிவாசிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு தேவைக்காக ஸ்ரீபெரும் புதுார் வருபவர்கள், தங்களின் கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திசெல்கின்றனர்.
இதனால், தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, வெளி வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும், வளாகத்தில் அதிகரித்துள்ள தெருநாய் தொல்லையை கட்டுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.