/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடந்த மூன்று ஆண்டுகளில் 7,090 தொழிற்சாலைகள் பதிவு
/
கடந்த மூன்று ஆண்டுகளில் 7,090 தொழிற்சாலைகள் பதிவு
ADDED : ஆக 24, 2024 07:33 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், புதிதாக 7,090 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், தொழிலாளர்களுக்-காக பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அரசு அமைத்துள்ள 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்-களில், 16 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்துஉள்ளனர்.
மொத்தம் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு, 1,551 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு இணையவழி தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்-துள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்ட, 2,930 வழக்குகள் உள்ளிட்ட, 7,145 தொழில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, பல்வேறு தொழிற்சாலைகள் சார்ந்த வேலை நிறுத்தங்கள் திரும்ப பெறப்-பட்டுள்ளன.
தமிழகத்தில், 1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் 7,090 தொழிற்சாலைகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளை மேற்-கொள்ளும் பிரிவில் 5,019 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்-பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு அலு
வலகம் சார்பில் நடத்தப்படும், தன்னார்வ பயிலும் வட்டங்களில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் படித்து, 5,138 பேர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு மற்றும் பொதுத்து-றைகளில் பணி நியமனம் பெற்று
உள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட, தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 2.03 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

