/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சகதி சாலைகளுக்கு விடிவு ரூ.10 கோடியில் சீரமைப்பு பணி
/
சகதி சாலைகளுக்கு விடிவு ரூ.10 கோடியில் சீரமைப்பு பணி
சகதி சாலைகளுக்கு விடிவு ரூ.10 கோடியில் சீரமைப்பு பணி
சகதி சாலைகளுக்கு விடிவு ரூ.10 கோடியில் சீரமைப்பு பணி
ADDED : ஆக 26, 2024 02:10 AM

மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் 2021ல் 249 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கப்பட்டன.
இதற்காக மடிப்பாக்கம், 187, 188வது வார்டுகளில், 439 சாலைகள் தோண்டப்பட்டு, குழாய் பதிப்பு மற்றும் ஆள் நுழைவு எனும் 'மேன்ஹோல்' அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் கொட்டி, முறையாக மூடவில்லை.
அதேபோல், மழைநீர் வடிகால் பணியால், மடிப்பாக்கத்தில் சாலைகள் குதறப்பட்டன. மழை பெய்தால் பல சாலைகள் சகதியாக மாறி, வாகனங்கள் செல்ல வழியின்றி, மிகவும் அவஸ்தைபட்டனர்.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி அவ்வப்போது வெளியானது.
இதன் நடவடிக்கையாக, இதுவரை தோண்டப்பட்டு பணி முடித்த, 395 சாலைகளுக்கு குடிநீர் வாரியத்தால் தடையில்லா சான்று வழங்கி, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதில், 296 சாலை வெட்டு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, 99 சாலை வெட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் கூறியதாவது:
பெருங்குடி மண்டலத்தில், இந்த நிதியாண்டிற்கான புதிய, தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில், 116 சாலைகள் 19.37 கி.மீ., துாரம், 10.71 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.
இந்த சாலை வெட்டு சீரமைப்பு பணி, மண் தோண்டுதல், சரளை கற்கள் நிறுவுதல், ஈரக்கலவை சேர்ப்பது, திடத்தன்மை, சிமென்ட் கான்கிரீட், நீராற்றுதல், தார் சாலை உள்ளிட்டவை, 27 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்களர் கூறினர்.

