/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
/
காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
ADDED : செப் 01, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டரம்பாக்கம்:காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காட்டரம்பாக்கம் ஊராட்சியில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 300 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நீர்வரத்து கால்வாய் வழியே சென்று ஏரியில் கலக்கிறது.
இதை தடுக்க நீர்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.