/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில் பயணியிடம் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ரயில் பயணியிடம் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஆக 27, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, ஒடிசா மாநிலத்தில்இருந்து ரயிலில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரு வதாக, அடையாறு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலை கண்காணித்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றவரை மடக்கி விசாரித்தனர்.
அவரது பையை சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த முகமது அன்சாப், 21, என்பதும், ஒடிசா மாநிலம் பேக்ராம்பூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும் தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.