sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

10 'லெஹார்ன்' கோழி குஞ்சு காஞ்சியில் ரூ.100க்கு விற்பனை

/

10 'லெஹார்ன்' கோழி குஞ்சு காஞ்சியில் ரூ.100க்கு விற்பனை

10 'லெஹார்ன்' கோழி குஞ்சு காஞ்சியில் ரூ.100க்கு விற்பனை

10 'லெஹார்ன்' கோழி குஞ்சு காஞ்சியில் ரூ.100க்கு விற்பனை


ADDED : ஆக 05, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தர்மபுரியைச் சேர்ந்த கோழி குஞ்சு வியாபாரிகள், காஞ்சிபுரத்தில், பிரதான சாலையோரத்தில், நடைபாதை கடை அமைத்து, கலர் கோழி குஞ்சு விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து தர்மபுரியைச் சேர்ந்த வியாபாரி எம்.சத்யராஜ் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்டோர், கோழி குஞ்சு கூடைகளுடன் டூ -- வீலரில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், செய்யாறு, அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் கோழி குஞ்சுகளை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளோம். 'லெஹார்ன்' வகை 10 கோழி குஞ்சுகள் 100 ரூபாய்க்கும், 4 குஞ்சுகள் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்.

பல்வேறு வண்ணங்களில் கோழி குஞ்சுகள் இருப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us