/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்.பி.,- எம்.எல்.ஏ., வளர்ச்சி பணிகளில் 108 பணிகள் முடியாமல் நிலுவை
/
எம்.பி.,- எம்.எல்.ஏ., வளர்ச்சி பணிகளில் 108 பணிகள் முடியாமல் நிலுவை
எம்.பி.,- எம்.எல்.ஏ., வளர்ச்சி பணிகளில் 108 பணிகள் முடியாமல் நிலுவை
எம்.பி.,- எம்.எல்.ஏ., வளர்ச்சி பணிகளில் 108 பணிகள் முடியாமல் நிலுவை
ADDED : செப் 17, 2024 08:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேலும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் என, இரு லோக்சபா தொகுதிகளும் இம்மாவட்டத்தில் உள்ளன.
சட்டசபை தொகுதிக்கு, ஆண்டுக்கு தலா 3 கோடி ரூபாயும், லோக்சபா தொகுதிக்கு மத்திய அரசு 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்கிறது.
இந்த நிலையில், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும், தங்கள் பகுதியில் தேவைப்படும் அரசு கட்டடங்கள், சாலை, பள்ளி கட்டடம் என, பல்வேறு திட்டங்களுக்கு செலவிடுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை பொருத்த வரையில், 2023- - 24ம் ஆண்டில், 58 பணிகள் எடுக்கப்பட்டு, 25 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 33 பணிகள் நிலுவையில் உள்ளன. இதற்காக, 8.9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024- - 25ம் ஆண்டில், 56 பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் எந்த பணிகளும் நடப்பாண்டில் முடியாமல் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதற்கு, 8.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன.
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை பொறுத்தவரையில், 2022- -- 23ல், 45 பணிகள் எடுக்கப்பட்டு 44 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக, 3.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. 2023- - 24ல், 81 பணிகள் எடுக்கப்பட்டு, 62 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 பணிகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. மொத்த பணிகளுக்கும், 4.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.