/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,105 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
1,105 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
1,105 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
1,105 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 14, 2024 10:34 PM

காஞ்சிபுரம்:தென்மேற்கு பருவ மழைக்கு, நீரில் மூழ்கி 1,105 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாய சங்க நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜா பாத், உத்திரமேரூர்,குன்றத்துார், ஸ்ரீபெரும் புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், சொர்ணவாரி பருவத்திற்கு, 29,464 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
ஆண்டுதோறும், தென்மேற்கு பருவ மழைக்கு, 2.70 செ.மீ., மழை பதிவாகும். நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை நேற்று முன்தினம் வரையில், 5.46 செ.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது.
இதனால்,நேரடி விதைப்பு மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது என, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
உதாரணமாக, காஞ்சிபுரம் வட்டாரத்தில், 400 ஏக்கர், உத்திரமேரூர் வட்டாரத்தில், 555 ஏக்கர் என, ஆகிய இரு தாலுகாக்களில், மட்டும் 955 ஏக்கர் பாதிப்பு அடைந்துள்ளன. குறிப்பாக, வாலாஜாபாத் தாலுகாவில், தென்னேரி கிராமத்தில், நெல் முதிர்வு பெறும் நேரத்தில் இருக்கும் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, உத்திரமேரூர் தாலுகாவில், பழவேரி, சீதாவரம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், நெய்யாடுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளன.
இந்த நெற்கதிரை, பெல்ட் அறுவடை இயந்திரத்தில், அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும், மூன்று மாதம் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் நேரு கூறியதாவது:
மழைநீரில் மூழ்கி நெற்பயிருக்கு ஏற்ப, விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 25,000 ரூபாய். கரும்பு, வேர்க்கடலை, இளம் பயிர்கள் என பயிர்கள் பாதிப்புக்கு ஏற்றவாறு, கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
ஜூலை மாதம் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, காப்பீடு முழு தொகை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
காஞ்சிபுரம் வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நம் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பாதிப்பு குறித்து, கணக்கெடுத்து அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம். பாதிப்புக் குரிய நிவாரணம் அரசு அறிவிக்கும் போது, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.