sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 13, ஸ்ரீபெரும்புதுாரில் 32 வேட்புமனு ஏற்பு

/

காஞ்சியில் 13, ஸ்ரீபெரும்புதுாரில் 32 வேட்புமனு ஏற்பு

காஞ்சியில் 13, ஸ்ரீபெரும்புதுாரில் 32 வேட்புமனு ஏற்பு

காஞ்சியில் 13, ஸ்ரீபெரும்புதுாரில் 32 வேட்புமனு ஏற்பு


ADDED : மார் 28, 2024 09:44 PM

Google News

ADDED : மார் 28, 2024 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் 9 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேர், மாற்று வேட்பாளர்கள் 3 பேர் என, 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு செய்த, 25 பேரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், தி.மு.க., வேட்பாளர் செல்வம், பா.ம.க., வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளையராஜா ஆகிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பதாக, கலெக்டர் கலைச்செல்வி அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் வேட்பாளரின் மனு மீது, நாம் தமிழர் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

வேட்புமனு முறையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றஞ்சாட்டினர். இதனால், பரிசீலனையில் அக்கட்சியின் வேட்பாளர் பூவரசன் என்பவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தி.மு.க., வேட்பாளர் செல்வம் பெயரில், திருப்புட்குழி கிராமத்தைச் சேர்ந்த டி.செல்வம் என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் மீதான வழக்கு ஒன்றை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என, தி.மு.க., சார்பில் ஆட்சேபனை தெரிவித்தனர்.

பரிசீலனையில் அவரது ஆவணங்கள், வழக்கு விபரங்களை ஆய்வு செய்த பிறகு, சுயேச்சை வேட்பாளர் செல்வத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

மொத்தமுள்ள 25 வேட்பாளர்களில், பிரதான கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும், ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள், மூன்று மாற்று வேட்பாளர்கள் என, 12 பேரின் வேட்புமனுக்களை கலெக்டர் கலைச்செல்வி தள்ளுபடி செய்தார்.

பிரதான கட்சியினர் ஐந்து பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் எட்டு பேர் என, 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இக்கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர் பூபேந்திரசவுத்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கேடஷ், கோட்டாட்சியர் கலைவாணி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதுாரில் 32 பேர்


ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட, 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டரின் தேர்தல் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், தாசில்தார் சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

வேட்பு மனு பரிசீலனை துவங்கியதும், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, தி.மு.க., வேட்பாளர் மனுவின் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞர் காலாவதியானவர் என, அ.தி.மு.க., வேட்பாளரின் வழக்கறிஞர்கள், சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு, தி.மு.க., வேட்பாளரின் வழக்கறிஞர் வில்சன், பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர் நோட்டரியாக வழக்கறிஞர் பதிவு பெற்றவர் தான். தற்போதும் நோட்டரியாக உள்ளார் என தெரிவித்தார்.

அதன்பின்,வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப் பட்டது என, தேர்தல் அலுவலர் தெரிவித்தார். பின், வேட்பாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.,வினர் வெளியேறினர்.

தொடர்ந்து, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.க., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் மற்றும் சுயேச்சைகள் என, 32 வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 21 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என, தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம், தேர்தல் அலுவலர் அருண்ராஜ் தலைமையில்நடந்தது.

இதில், தி.மு.க., - அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கும், 11 பதிவு பெற்ற அரசியல் பிற கட்சிகள், 18 சுயேச்சைகள் என, 32 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்ற வேட்பாளர்கள் மற்றும் உடன் வந்த அரசியல் கட்சியினர்.






      Dinamalar
      Follow us