sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் துவக்கப்பட்ட 2,163 திட்டப்பணிகள்... முடக்கம் நிதிக்குழு மானியம் வரவில்லை என மழுப்பல்

/

காஞ்சியில் துவக்கப்பட்ட 2,163 திட்டப்பணிகள்... முடக்கம் நிதிக்குழு மானியம் வரவில்லை என மழுப்பல்

காஞ்சியில் துவக்கப்பட்ட 2,163 திட்டப்பணிகள்... முடக்கம் நிதிக்குழு மானியம் வரவில்லை என மழுப்பல்

காஞ்சியில் துவக்கப்பட்ட 2,163 திட்டப்பணிகள்... முடக்கம் நிதிக்குழு மானியம் வரவில்லை என மழுப்பல்


ADDED : மார் 10, 2025 12:21 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கப்பட்ட, 2,163 வளர்ச்சி திட்டப் பணிகளை முடிக்கமுடியாமல், மாவட்ட நிர்வாகம் அரைகுறையாக விட்டுள்ளது. இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 15வது மத்திய நிதிக் குழு மானியம் கிடைக்காததே காரணம் என, அதிகாரிகள் மழுப்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றிய நிர்வாகம், 247 ஊராட்சிகள் அடங்கிய, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன..

இந்த உள்ளாட்சி நிர்வாகங்களில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய நிதிக் குழு மானியம் வழங்குகிறது.

இந்த நிதியை, இரு தவணைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கும்.

இதில், 30 சதவீதம் துாய்மை மற்றும் சுகாதாரம் ஆகிய பணிகள் செய்வதற்கும், குடிநீர் வளர்ச்சி பணிகளுக்கு 30சதவீதமும். அரசு கட்ட டம் மறுசீரமைப்பு செய்வதற்கு 40 சதவீதமும்என, மொத்தம், 100 சதவீதம் நிதியை பயன்படுத்தி, பலவித வளர்ச்சி பணிகள் செய்துவருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி நிர்வாகங்கள் என அழைக்கப்படும் மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகங்களுக்கு, 47.12 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக்குழு மானியமாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியை, 247 ஊராட்சிகளுக்கு, 37.14 கோடி ரூபாய். வட்டார நிர்வாகங்களுக்கு, 7.49 கோடி ரூபாய். மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு, 2.49 கோடி ரூபாய் என,மொத்தம் 47.12 கோடி ரூபாய் மூன்று உள்ளாட் சிகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பகிர்ந்தளித்துஉள்ளது.

இதில், பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு, அங்கன்வாடி மைய கட்டடங்கள் சீரமைப்பு ஆகிய பல வித வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன.

குறிப்பாக, ஊராட்சி நிர்வாகங்களில், 2,464 பணிகள். வட்டார நிர்வாகங்களில், 135 பணிகள். மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தில், 26 பணிகள் என, மொத்தம் 2,625 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதில், 462 பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளது. மீதம், 2,163 பணிகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், 2025- - 26ம் நிதி ஆண்டிற்கு பணிகள் தேர்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி செயலர்கள் ஆகியோர் பணிகளை தேர்வு செய்யும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்வு செய்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக பணி ஒப்பந்தம் எடுத்தவர்கள் இடையேபுலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வட்டார நிர்வாகம், கிராம நிர்வாகங்கள் என, மூன்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, 47.12 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவக்கப்பட்டன.

முதற்கட்ட நிதி மட்டுமே கிடைத்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட நிதி கிடைக்காததால், பெரும்பாலான வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளன.

நிலுவை நிதி கிடைத்த பின், கிடப்பில் போடப்பட்ட பணிகள் தீவிரப்படுத்தி நிறைவு செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us