/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு
/
மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு
ADDED : ஆக 20, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வருணன் என்பவருக்கு சொந்தமான இரண்டு கறவை மாடுகள் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் என்பவருக்கு, சொந்தமான ஒரு மாடு என, மூன்று மாடுகள், நேற்று பகல் 1:00 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்றன.
கொள்ளாபுரியம்மன் கோவில் அருகே, வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று மாடுகளும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.