/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 21, 2024 10:45 AM

செய்யூர்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் பி.டி.ஓ., பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, சித்தாமூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரில் வந்தவர் திருச்சியை சேர்ந்த சரண்யா என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி, பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், செய்யூர் உதவி தேர்தல் அலுவலர் ராதாவிடம் ஒப்படைத்தனர்.