/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 349 மனு ஏற்பு
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 349 மனு ஏற்பு
ADDED : ஆக 14, 2024 08:31 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்புலியூர், குருமஞ்சேரி, பழவேரி, பினாயூர், திருமுக்கூடல் ஆகிய ஊராட்சிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், கரும்பாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில், 349 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட 15 பேருக்கு அனுமதி ஆணையும், 10 பேருக்கு வரும்முன் காப்போம் மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது.
உத்திரமேரூர் பி.டி.ஒ., லோகநாதன், அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன், தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.