/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் கொள்ளை
ADDED : மே 27, 2024 07:01 AM
சென்னை: சென்னை, டி.பி.சத்திரம், ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன்,50; இந்தியா ஜனநாயக வாலிபர்கள் சங்க அண்ணா நகர் பகுதி பொருளாளர்.
இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்ற நிலையில், அவரது தாய் பவானி வீட்டை பூட்டிக்கொண்டு, அருகிலுள்ள மாவு 'மில்'லுக்குச் சென்றுள்ளார்.
ஒரு மணி நேரம் கழித்து பவானி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தகவலின்படி வந்த ரங்கநாதன், இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
திருடுபோன நகைகள், ரங்கநாதனின் சகோதரி ராஜலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

