/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடியில் நல உதவி
/
191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடியில் நல உதவி
ADDED : ஆக 27, 2024 11:41 PM
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர்அன்பரசன் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த 306 பேர், பட்டா கேட்டும், வேலைவாய்ப்பு,ஆக்கிரமிப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற அமைச்சர் அன்பரசன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியிடையே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், 191 பயனாளிகளுக்கு, 4.12 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
மனு பெறும் நிகழ்ச்சி முடிந்த நிலையில், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு சம்பந்தமாக, அனைத்து துறை ஆய்வு கூட்டமும் நடந்தது.
இதில், மழை பாதிப்பு இடங்கள், மண்டல அளவிலான அதிகாரிகள் நியமனம், தடுப்பு நடவடிக்கைகள், உபகரணங்கள் போன்றவை பற்றி பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள்கூறினர்.
இதையடுத்து, தேனம்பாக்கம் பகுதியில் நுகர்ப்பொருள் வாணிப கழகம்சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கிவைத்தார்.