/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி
/
நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி
ADDED : மே 24, 2024 06:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்: கிழக்கு தாம்பரம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் நித்யசுபா, 49. தன் மகள் படிக்கும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று கட்டணம் செலுத்தி, வீட்டிற்கு திரும்பினார்.
ஆஞ்சநேயர் கோவில் தெருவில் நடந்து சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், நித்யசுபா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.