/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
7 டூ - வீலர்கள் பறிமுதல் வாலிபருக்கு 'காப்பு'
/
7 டூ - வீலர்கள் பறிமுதல் வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மே 11, 2024 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில், அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு நடந்து வந்தன. இதையடுத்து, சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில், தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது, ஒலிமுகமதுபேட்டை பகுதியைச் சேர்ந்த தரணிதரன், 22, என்பவர், இருசக்கர வாகன திருட்டில், ஈடுபட்டது தெரிய வந்தது.
தரணிதரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஏழு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.