/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குருப் -2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்
/
குருப் -2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்
ADDED : செப் 14, 2024 07:43 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய, குரூப் - 2 தேர்வில், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப்- 2 பதவிகளுக்கு 507 காலியிடங்களையும், அதேபோல, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், ஹிந்து சமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட குரூப் -2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என, மொத்தம் 2,327 இடங்களை நிரப்புவதற்காக, ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, 8 லட்சம் பேர் தமிழகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 17,944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 45 தேர்வு மையங்களில், 65 அறைகளில் குருப் - -2 மற்றும் குருப்- - 2ஏ தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
இதில், 13,965 பேர் தேர்வு எழுதினர். மீதம், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வினை கண்காணிக்க, 16 மொபைல் டீம், 4 பறக்கும் படையினர் கண்காணித்தனர்.