/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐ.டி., ஊழியரிடம் 8 சவரன் பறிப்பு
/
ஐ.டி., ஊழியரிடம் 8 சவரன் பறிப்பு
ADDED : ஜூன் 12, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு மனைவி சாந்திபிரியா, 30; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர்.
நேற்று, காலை 10:00 மணி அளவில், காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சுப நிகழ்ச்சிக்கு சென்று, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவர், சாந்திபிரியா கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், சாந்திபிரியா அளித்த புகாரின்படி, போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.