/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரசித்தி விநாயகர் கோவிலில் 80வது ஸ்தாபித தின உற்சவம்
/
வரசித்தி விநாயகர் கோவிலில் 80வது ஸ்தாபித தின உற்சவம்
வரசித்தி விநாயகர் கோவிலில் 80வது ஸ்தாபித தின உற்சவம்
வரசித்தி விநாயகர் கோவிலில் 80வது ஸ்தாபித தின உற்சவம்
ADDED : மார் 25, 2024 05:41 AM

காஞ்சிபுரம், : சின்ன காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெருவில், வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 1944ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், வரசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையொட்டி ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ஸ்தாபித தின உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 80வது ஆண்டு ஸ்தாபித தின உற்சவம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு பால், தேன், இளநீர், விபூதி, ஜவ்வாது பல்வேறு திரவியங்கள் மற்றும் பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
மாலை பஞ்சமி திதியையொட்டி, வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு அபிேஷக அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பவுர்ணமி உற்சவம்
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில், பங்குனி மாத பவுர்ணமியையொட்டி நேற்று, மூலவர் ருத்ர கோட்டீஸ்வரருக்கு இளநீர் பால், தேன், சந்தனம், ஜவ்வாது, பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.

