நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன.
இதில், வட்டார நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகள் என, இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி இடங்கள் உள்ளன.
ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, பல்வேறு வளர்ச்சி பணிகளை கண்காணிப்பதற்கு, தனித்தனியாக ஜீப் வழங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஜீப்கள், 2.50 லட்சம் கி.மீ., துாரம் மற்றும், 10 ஆண்டுகள் பயன்படுத்தி வாகனங்களாக இருப்பதால், கழிவு நீக்கம் செய்ய ஊரக வளர்ச்சி துறை, அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு ஒன்று, மீதம் நான்கு ஒன்றியத்திற்கு தலா இரண்டு என, ஒன்பது ஜீப்கள் நேற்று வழங்கப்பட்டு உள்ளன.