/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒன்றுகூட பதிவாகாத தேர்தல் விதிமீறல் வழக்கு
/
ஒன்றுகூட பதிவாகாத தேர்தல் விதிமீறல் வழக்கு
ADDED : மார் 25, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு என, 84 குழுவினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் ஒரு குழுவே இயங்கி வருகிறது.
அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுகின்றனரா என போலீசாரும் கண்காணிக்கின்றனர்.
ஆனால், மாவட்டம் முழுதும் இதுவரை தேர்தல் விதிமீறல் வழக்கு ஒன்றுகூட பதிவாகவில்லை என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

