/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் தலை தொங்கிய 'சிசிவிடி' கேமரா
/
ஒரகடத்தில் தலை தொங்கிய 'சிசிவிடி' கேமரா
ADDED : ஆக 30, 2024 01:07 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில் ஒரகடம் அமைந்துள்ளது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
அதேபோல, ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு பேருந்து பிடித்து நாள்தோறும் ஒரகடம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், குற்ற சம்பவங்களை தடுக்க, குற்ற செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியான பகுதிகள் மற்றும் சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்ப்டுள்ளன.
அந்த வகையில், ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், பிரதான சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா தலை தொங்கியும், இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் உள்ளது.
இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம், விபத்து நடந்தால் குற்றவாளியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சிசிடிவி கேமரா அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எனவே, தொங்கிய நிலையில் உள்ள சிசிவிடி கேமராவை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

