/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன ஓட்டிகளை காவு வாங்க காத்திருக்கும் ராட்சத பேனர்
/
வாகன ஓட்டிகளை காவு வாங்க காத்திருக்கும் ராட்சத பேனர்
வாகன ஓட்டிகளை காவு வாங்க காத்திருக்கும் ராட்சத பேனர்
வாகன ஓட்டிகளை காவு வாங்க காத்திருக்கும் ராட்சத பேனர்
ADDED : மே 03, 2024 10:48 PM

ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் லட்சக்கணக்காண ஊழியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில், தினமும் இச்சாலையின் வழியே சென்று வருகின்றனர்.
முறையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காமல், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகள், அவ்வப்போது சரிந்து விழுந்து விபத்து மற்றும் உயிர்பலி நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், பேக்குவரத்து அதிகம் உள்ள வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம் அடுத்த செரப்பனஞ்சேரியில், கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பதாகை கிழிந்து தொங்குகிறது.
இதனால், காற்று வேகமாக வீசும் போது, கிழிந்து சாலையில் செல்லும் வாகனங்களின் மீது விழுந்து, விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, உயிரிழப்பு ஏற்படும் முன், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.