/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து
/
சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து
ADDED : ஜூலை 12, 2024 09:14 PM

ஸ்ரீபெரும்புதுார்:செங்கல்பட்டில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் தடம் எண்:82சி அரசு பேருந்து, நேற்று மதியம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக திருவள்ளூர் சென்றது.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்து நெமிலி கிராமம் அருகே சென்ற போது, திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்ததால், ஓட்டுனர் பேருந்தின் வேகத்தை குறைக்க முயன்றார். அப்போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையோர உள்ள பள்ளத்தில் இறங்கியது.
இதில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்த தகவலின்படி அங்குவந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், பள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.