/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆவடியில் நாளை ஒரு நாள் செஸ் போட்டி
/
ஆவடியில் நாளை ஒரு நாள் செஸ் போட்டி
ADDED : ஜூலை 20, 2024 03:04 AM
சென்னை: ஆவடியில் நாளை, சிறுவர்களுக்கான, மாநில அளவில் ஒரு நாள் செஸ் போட்டி நடக்கிறது.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் ஆதரவில், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், சிறுவர்களுக்கான ஒரு நாள் மாநில செஸ் போட்டி, நாளை நடக்கிறது.
போட்டிகள், ஆவடியில் உள்ள வேலாம்மாள் வித்யாலாயா பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில், 8, 10, 12, 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் பெரியவருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள் பிடே விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் நடக்கின்றன.
வெற்றி பெறும் சிறுவர்களுக்கு கோப்பைகளும், பெரியவர்களுக்கு 42,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.
பங்கேற்க விரும்புவோர், 99414 90200 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.