/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை
/
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ரேஷன் கடை
ADDED : செப் 09, 2024 05:50 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, 5வது வார்டு தாமல்வார் தெருவில், புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன், 2021- - 22 நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 14.12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்தார்.
இந்நிதியில் புதிதாக அங்கன்வாடி மையகட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
அங்கன்வாடி மையத்தை ஒட்டி, புதிதாக ரேஷன் கடை கட்ட 2022- - 23 நிதியாண்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.எல்.ஏ., எழிலரசன் 18.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இந்நிதியில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் கட்டுமானப் பணி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், திறப்பு விழா நடத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இரு கட்டடமும் வீணாகி வருகின்றன.
எனவே, காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையகட்டத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கூறியதாவது:
காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், அங்கன்வாடி மையத்தின் உட்பகுதியில் 'டைல்ஸ்' பதிக்கும் பணி நடைபெற உள்ளது.
இப்பணி முடிந்ததும்,10 நாட்களில் இருகட்டடங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.